Thursday, September 21, 2006

இன்று சில ஹைக்கூக்களை இங்கு நிரப்பலாமா?

நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்தவை:

ஆசையால் வாங்கினேன்...
புத்தர் சிலை.

சோம்பேறியின் வீட்டில் சுறுசுறுப்பாய்....
சிலந்தி.

குழாயடியில் அமைதி ( ?! )
குடங்களுடன் ஆண்கள்.

சுடும் வெயில் கடும் மழை
பாவம் அவள் பாதச்சுவடுகள்


நான் எழுதியவற்றில் சில.....

சேமிப்பது சுலபம் செலவழிப்பது கடினம்
உடலில் கொழுப்பு.

ஓடாத கடிகாரம் கூட சரியாக நேரம் காட்டுகிறது
ஒரு நாளைக்கு இருமுறை.

வீட்டில் ஒரு செடியில்லை
முதலீடோ தேக்குமரத்திட்டத்தில்.

எழுநூறு அடியில் ஆழ்குழாய் தண்ணீர்
செம்மண் நிறத்தில்
பூமித்தாயின் குருதி.

தினமும் இடுகிறார்கள் இயற்கை உரத்தை(?!)
ஆற்றோரம்
செடிகள்தான் வளர வில்லை.

சுதந்திர தினத்தன்று உரையாற்றினார் பிரதமர்
கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடியே.

ஏழையின் கவலை - பணத்திற்கு என்ன செய்வது
பணக்காரனின் கவலை - பணத்தை என்ன செய்வது

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் - பழமொழி
ஒரு சோறுக்கு ஒரு பானை சோறு பதம் - வாடகைக்கு பார்க்கும் வீடு.

வீடெங்கும் சன்னல்கள்
மூடியபடியே...
நகரத்து வீடு.

எனக்கு ஒரு சந்தேகம்...
இறந்தவரைப் பார்த்து மனிதர்கள் அழுவது போல்
பிறந்த குழந்தையைப் பார்த்து ஆவிகள் அழுமோ?

Wednesday, September 20, 2006

ஒரு வழியாக தமிழில் பதிவு செய்ய தேவையானவற்றை செய்து முடித்து விட்டேன். இனி எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிப்பித்து விட வேண்டியதுதான்.